12/22/2024

மின்னிதழ் 17

மார்ச் – ஏப்ரல் 2023 அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்! காலம் மற்றும் அனுபவங்களைப் போல் சிறந்த ஆசான்கள் எவருமில்லை.ஆகவே, காலம் தரும் அனுபவப் பாடங்களைக் கற்று, வாழ்க்கையில் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வது அவசியமாகிறது. …

மின்னிதழ் 16

கவிஞர் இந்தியாவைச் சேர்ந்தவர்; தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் என்ற ஊரில் பிறந்தவர். திருவாரூர் மாவட்டம் தமிழ்ச்சான்றோர்களுக்குப் பெயர் பெற்ற ஊர். ஆரூர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் தியாகராசர் சுந்தருக்காக வீதிகளில் நடந்த பெருமை திருவாரூருக்கு உண்டு. தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் வாழ்ந்த ஊர். திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளைதான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊர் . திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில்தான் கவிஞர் பிறைசூடன் திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் பிறந்துள்ளனர். இன்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் ஆரூர் தமிழ்நாடன் பட்டி மன்ற நகைச்சுவைப் பேச்சாளர் சண்முக வடிவேல் ஆகியோரோடு திருவாரூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்ப்பவர் இந்தக் கவிஞர்.

மின்னிதழ் 15

புதுக்கவிதைகளை எழுதி, கவியரங்களில் வாசித்து வந்த பிரவந்திகாவிற்கு பல அமைப்புகள் பாராட்டும் ஊக்கமும் தந்தன. அவ்வகையில் «கவிமலர்கள் பைந்தமிழ் சங்கம்» வழங்கிய «இளங்கவி» விருதினை பாடலாசிரியர் நிகரன் கரங்களால் பெற்றார். «கவிமலர்கள் 1130 கவிதைகளின் சங்கமம்» என்ற நூலிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன

பல சிறார் அமைப்புகளின் வாயிலாக பன்னாட்டுக் குழந்தைகளுக்கும் கதை சொல்லி வரும் இவர், சிறுவர் கதைப் புத்தகங்களை விமர்சனமும் செய்து வருகிறார். இவர் எழுதிய நூல் விமர்சனங்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டுள்ளன.

தொடர்ந்து சிறுவர்களுக்கானக் கதைகளை எழுதத் துவங்கினார். உழவுக்கவிஞர் உமையவன் தொகுத்த ‘அந்தியில் மலரும் மொட்டுகள்’, புத்தக நண்பன் குழு தொகுத்த ‘சுக்கா…புக்கா… முக்கா…’ தொகுப்பு நூல்களில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. எழுத்தாளர் அன்புச்செல்வி சுப்புராஜூ தொகுத்த ‘குட்டி மேகங்கள் தூவிய தூறல்கள்’ மற்றும் ‘வாண்டுகள் சொன்ன கதைகள்’ புத்தகங்களில் இவர் எழுதிய கதைகள் வெளிவந்துள்ளன. ‘வெட்சி’ இலக்கிய இதழில் இவரது கதை வெளிவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் ‘தமிழ்நெஞ்சம்’ இதழில் இவரது பல படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

மின்னிதழ் 14

தமிழை வளர்க்கும் முகமாகவும், வளர்ந்துவரும் நம் தலைமுறையினருக்கு பயனளிக்கும் வகையிலும் கவிதை, சிறுகதை, ஆக்கபூர்வமன கட்டுரைகள் என முகநூலில் பதிவிட்டும், பத்திரிகைகளில் வெளியிட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அத்தோடு «அணங்கே அகிலம் வெல் «எனும் பெண்ணியம் சார்ந்த கவிதை நூல் ஒன்றையும் அண்மையில் வெளியிட்டுள்ளார். இது இவரது கன்னிநூலாகும்.
பல போட்டிகளில் பங்குபற்றி சான்றிதழ்களும், பல நினைவுசின்னங்களும் பெற்றிருக்கும் இவர், எழுத்தாளராகக் களமிறங்கி ஒருவருட காலமே ஆகிறது. தமிழுக்காக மனமுவந்து சேவைகள் செய்வதை பணியாகக் கொண்டிருப்பதால், இதுவரை விருதுகளை இலக்கு வைத்து பயணிக்கவில்லை எனக்கூறும் இச்சகோதரி, ‘‘எதிர்வரும் வருடம் இதே நாளில் பல விருதுகளைக் கைக்கொண்டு உங்கள் முன்னிருப்பேன்’’ என்பதை உறுதியாகத் தன்னம்பிக்கையுடன் சொல்கிறார்.

மின்னிதழ் 13

இன்றைய ஆளுமை, பத்திரிகைத் துறை, ஓவியங்கள் வரைதல், இதழ்கள் நூல்கள் வடிவமைப்புச் செய்தல், கவிதை எழுதுதல், நாடகம், நடிப்பு, கணிணி சம்பந்தமான ஆற்றல் வெப் மாஸ்டர், இப்படி பன்முகத் திறமைகள் கொண்டவராய் திகழ்பவர்.

பத்திரிகைத்துறையில் பழுத்த அனுபவ சாலியான இவர், இலங்கை, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் வெளி வரும் பல இதழ்களின் வெற்றிக்குப் பின்னணியாக இருந்து ஊக்கம் கொடுப்பவர். எமது முத்தமிழ் கலசம் இதழுக்கும் கௌரவ ஆசிரியராக இருந்து, ஆக்கங்களை நெறிப்படுத்தி அழகிய முறையில் வடிவமைப்பு செய்து தருவதுடன் இதழின் முன்னேற் றத்துக்கு பக்க பலமாக இருந்தும் வருபவர்.

பல நூலாசிரியர்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்து, ஏறத்தாழ ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை வடிவமைத்து, அவை வெளியீடு காணவும் வழியமைத்துக் கொடுத்தி ருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

மின்னிதழ் 12

நூல்கள், சஞ்சிகைகளின் முதற்பிரதியை வாங்கி கின்னஸ் புத்தக உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் புரவலர் ஹாஷிம் உமர் ஆவார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பாட்டலியா எனும் நகரில் உமர், ஹவ்வா உம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். சிறு குழந்தையாக இருந்த போதே குடும்பத்தினருடன் இலங்கைக்கு குடிபெயர்ந்த இவரின் தாய்மொழி மேமனாகும். இருப்பினும் தமிழ்மொழி மீது இவர் கொண்ட தீராத பற்று, இலக்கிய உலகில் இவர் பெயரை உச்சத்துக்கு கொண்டு சென்றதெனலாம். இலக்கிய ஆர்வலராக பல்லாயிரம் இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்தது மட்டு மல்லாமல், எழுத்தாளர்களின் முதற் பிரதியைப் வாங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கும் மாபெரும் பணியை 1994 ஆண்டு முதல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரின் அளப்பரிய முயற்சியும், ஆர்வமும் இலங்கையுடன் மட்டுப்படாமல் பல்வேறு நாடுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் பங்கேற்று முதற்பிரதியை பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. இவர் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான முதற் பிரதிகளை வாங்கி சாதனை படைத்துள்ளார்.

மின்னிதழ் 11

Dr ஜலீலா முஸம்மில் MBBS (SL)

இலங்கை நாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்டவர்.

கடந்த 14 வருடங்களாக வைத்திய அதிகாரியாக கடமை புரிந்து வருகிறார். மருத்துவக் கல்வியை கொழும்பு களனிப் பல்கலைக்கழகத்தின் றாகமை மருத்துவ பீடத்தில் கற்று முடித்தார். தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமை புரிகிறார்.தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் கடமை புரிந்தவர்.

மின்னிதழ் 10

இவரின் சமூகசேவையானது இலங்கை உட்பட, உலகின் பல பாகங்களிலும் உள்ள வாழ்வாதாரமற்ற பல்லாயிரம் ஏழைகளை வாழ்வித்து வருகிறது. இவரின் சிறுவயதிலிருந்தே இல்லாதோருக்கு உதவவேண்டுமென்றிருந்த கனவு மெய்ப்பட இவரின் உழைப்பும் விடாமுயற்சியும் கைகொடுத்துள்ளன. அதோடு (உதவும் கரங்கள்) helping hand Zaithoon Nhar foundation எனும் தொண்டு நிறுவனத்தை 2017 ஆம் ஆண்டு நிறுவி, உலகளாவிய ரீதியில் உதவி தேவைப்படுவோருக்கெல்லாம் தன் நேசக்கரங்களை நீட்டி அரவணைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த வெற்றிகரமான முயற்சிக்குப், பல தாராள மனப்பான்மையுள்ள பொதுநல சேவை மனப்பான்மை கொண்ட பலரும் கரம் கோர்த்து உதவி வருவதும் பாராட்டுக்குரிய விடயமாகும். இவரில் துளிர்த்த மனிதநேயம், பல்லாயிரம் மக்களின் மனங்களிலும், அவர்களின் இருகரமேந்திய பிரார்த்தனைகளிலும் இவரை இருத்தியுள்ள தென்றால் மிகையாகாது.

மின்னிதழ் 9

விளக்கின் ஒளியாம் விளக்கணித் திருவிழா!
விலகிப் போகும் விரைவாய்த் தொற்றும்!
மீண்டும் வசந்தம் மீள வேண்டும்!
ஆண்டு முழுதும் அமைதி வேண்டும்!
கடந்த நாட்கள் மனத்தின் பாரம்!
கடந்து போவோம் நீண்ட தூரம்!
விழாக்கள் வரட்டும்! விடியல் தரட்டும்!
அழைப்போம் நட்பை! அன்பின் உறவை!
இனிதாய் வாழ்த்த இனிமை சேரும்!
தனிமை போக்கித் தவிப்பை நீக்கி
மனத்தை மகிழ்வாய் மாறச் செய்வோம்!
இணக்க மிருந்தால் எதுவும் முடியும்!
தித்திப் பான தீஞ்சுவை இனிப்பு!
மத்தாப் பூவாம் மலராய்ச் சிதறும்!
ஒலிக்கும் வெடிகள் ஓசை கூட்டும்!
களிப்பாய்ப் பண்டிகைக் காட்சி அழகே!

மின்னிதழ் 8

தாய் மாண்ட சேதியறியாமல் கரமிரண்டால்
சேயிழுத்த கையறு நிலையிங்கே சூழ்ந்தது
நாய் சடலமுண்டு பசிதீர்க்கும் பஞ்சத்தால்
காயங்காக்கும் வழியின்றி பல்லுயிரும் மாண்டன