இலக்கிய வேட்கையுடன் உட்பிரவேசிக்கும் அனைவரையும் ‘முத்தமிழ் கலசம்’ அன்புடன் வரவேற்கிறது.
தமிழன்னையின் ஆசிகளுடன் நடைபயிலக் காத்திருக்கும் ‘முத்தமிழ் கலசம்’ எனும் குழந்தை உங்கள் நேசக்கரம் பிடித்து தன் பயணத்தை இனிதே தொடங்கும் இத்தருணத்தில், உங்கள் பாதையெங்கும் கதம்பமாய் மணம் பரப்ப பல்வேறு சுவையான படைப்புகள் காத்திருக்கின்றன. இதில் பலதரப்பட்ட கவிதை, கதை, கட்டுரைகளென அணி சேரக் காத்திருக்கும் இன்னோர் அம்சமாக, இலங்கையில் இயற்கையின் எழில் கொஞ்சும் அழகிய இடங்களின் தொகுப்புகள், உங்களை மெய்மறக்கச் செய்யும். எம் நாட்டின் வரலாற்றுச் சிறப்புகள் சொல்லும் சரித்திரங்கள் உங்களை பிரமிக்க வைக்கும். மலையகமும் தன் வாழ்வியலை எடுத்துச் சொல்லும்
மின்னிதழ் இரு மாதங்களுக்கொரு முறை இலக்கிய விருந்து படைக்கவும் தயாராகியுள்ளது . தளத்தின் ஒவ்வோர் அங்குலத்தையும், உங்களுக்கு மனநிறைவு தரும் வகையில், வண்ணச் சிந்தனை மிக்க எழுத்துக்களால், எழிலோவியமாய் அழகுத் தமிழில் மெருகேற்றிக் காட்சிப்படுத்தக் காத்திருக்கிறோம்.
உங்கள் கண்களுக்கும் சிந்தைக்கும் விருந்நு படைக்கப் போகும் படைப்புகளுக்கு உங்கள் கருத்துகளைக் காணிக்கையாக்கி எம்மை வளப்படுத்த வாருங்கள்!
உங்கள் ஆதரவுடன் இணைய வானில் இதய நட்சத்திரமாக வலம் வரப்போகிறோம் வாழ்க! வளர்க!
- சித்தி வஃபீரா
ABOUT
Muththamizh Kalasam warmly welcomes those of you who visited this page in the hopes of quenching your literary thirst.
With the blessings of Mother Tamizh, we’ve just taken the 1st step in what could only be a long journey, one that we hope you would join us in.
We’ve got many interesting creations coming up for you, and it will also feature some of the most beautiful places of nature in Sri Lanka among top rated poems, and we guarantee that you will be mesmerized by the facts we have in store for you.
Our E-magazine is a bi-monthly issue that is all set to give you a literary feast. Our site will contain many articles that inspire and give you the ultimate contentment
- Sithy Wafeera
The editor of ‘‘Muththamizh kalasam’’,
23, Amarasekara Mawatha,
Colombo 05.,
Sri lanka