மேலேயுள்ள செப்டெம்பர் – அக்டோபர் 2023 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!
2020 இல் “இரவைக் காக்கும் இமைகள்” – கவிதைத் தொகுப்பு வெள்ளாப்புவெளி மூலம் வெளியிடப்பட்டது. கொரோனா சூழ்நிலையில் இலங்கையில் இணையவெளியில் வெளியீட்டு விழா நடாத்தப்பட்ட முதலாவது நூல் இதுவாகும்.
மஸ்ஜிதுல் அக்சா போன்ற இஸ்லாமிய புனித ஸ்தலங்களையும் குர்ஆனில் கூறப்பட்ட அத்தாட்சிகளையும் (குகை வாசிகள், சாக்கடல், பிர் அவ்னின் உடல், ஸலாஹுத்தீன் ஐயூபின் கோட்டை) நேரில் சென்று பார்த்துவிட்டு முகநூலில் பயணக்கட்டுரை தொடரொன்று எழுதி வந்திருக்கிறார்..” என் சிறகில் சிக்கிய வானம்” என்ற தலைப்பில் அந்தக் கட்டுரைத் தொகுப்பு இந்த வருடம் நூலுருப் பெற்றது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் இவர் எழுதிய சுமார் 30 நாடகங்கள் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி உள்ளன. இவர் எழுதிய “பாறையில் பூத்த மலர்” என்ற தொடர் நாடகம் ஒன்றும் ஒலிபரப்பாகி உள்ளது.