01/31/2026

மின்னிதழ் 34

பொங்கலோ பொங்கல்….


இப்பெரும் பொங்கல் நாளை
இதயமே கனிய நானும்
செப்பிட வந்தே னையா
சீர்தமிழ்த் தந்தே னையா
ஒப்பிலா தமிழ ருக்கே
உரிதானத் திருநாள் இஃதில்
தப்பிலா மேழி யர்க்குத்
தமிழ்மொழி வாழ்த்து மையா


தமிழ்நெஞ்சம் அமின்
பிரான்சு

மின்னிதழ் 33

சமூகத்தில் நடக்கின்ற அவலங்களையும் சம்பவங்களையும் ஒரு சிறுகதையாக, அல்லது நாடகமாக வைத்து பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியாது விடினும், நடந்த சம்பவத்தை வைத்து, தடுக்கக் கூடிய வழிவகைகளை சமூகத்துக்கு விழிப்புணர்வாக கொடுக்கலாம்.