12/30/2025

மின்னிதழ் 22

மேலேயுள்ள சனவரி – பெப்ரவரி 2024 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

பிள்ளைக் கனியமுதே

என் மகன் ஈன்றெடுத்த தவப்புதல்வனே!
அழகிற்கு அழகடா உன் சிரிப்பு 
அமுதினும் இனிமை உன் மழலை மொழி
நீயோ அழகோவியமாம் மொனாலிஸா

கையில் தவழும் கற்கண்டே!
கவலைகள் நீக்கும் அருமருந்தே
குறும்புகளால் வியக்க வைக்கும்
எட்டாம் அதிசயமும் நீயடா

மெளனம் கூட அழகு தானே
வார்த்தையில்லா உன் மொழியில்
நறுமலர்களின் மணம் கூட 
தோற்று நிற்கும் உன் நறுமணத்தில்

பஞ்சு போன்ற கன்னமதை
கொஞ்சிடத்தான் கொள்ளை ஆசை
உந்தன் முல்லைச் சிரிப்பழகில்
நெஞ்சமெல்லாம் பஞ்சாகுது

நீ கண் சிமிட்டிடும் அழகைக்
காணக்கண் கோடி வேண்டும்
கண்ணோரம் நீர் கசிய
காலமெல்லாம் ரசிப்பேனடா உன்னழகை

என் மகன் எனும் அன்பின் சிகரத்திற்கு
தந்தை எனும் உயிர் முகவரியிட்ட
அனிச்ச மலர் நீயல்லவா
அபூர்வ வைரமும் நீயல்லவா

சித்தி மிஸ்ரியா அமீன்
கிண்ணியா