மின்னிதழ் 30
மேலேயுள்ள மே – ஜூன் 2025 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!
Thamizh Web Site
மேலேயுள்ள மே – ஜூன் 2025 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!
உன் அகக்கண்களெங்கும் அன்பின் ஊற்று
அழகிய வதனமெங்கும் அமைதியின் ஒளிக்கீற்று
பைந்தமிழின் ஈர்ப்பு உன்னுள் விசையேற்ற
பற்றுக் கொண்டோரை ஈர்க்கிறாய் தமிழ்த்தொண்டாற்ற
விடாமுயற்சியும் பயிற்சியும் கொண்டு – உன்
வெற்றிக்கிட்டாய் உறுதியாய் அடித்தளம்
திறமையுள்ளோரை அரவணைத்து அமைத்துக்
கொடுத்தாய் அவர்கட்குச் சிறப்புக்களம்
எத்திசைப் பறவைகட்கும் வேடந்தாங்கலாய் நீ
எங்கும் நிழல் தேடியலைவோர்க்கும் பெருவிருட்சம் நீ
அடரிருளில் தொலைவோர்க்கு ஒளிவிளக்காய் நீ
கரைகாணா கவிஞர்க்கும் கலங்கரை விளக்காய் நீ