12/30/2025

மின்னிதழ் 19

அறிமுகம் / மின்னிதழ்

ஜூலை – ஆகஸ்ட் 2023

மேலேயுள்ள ஜூலை – ஆகஸ்ட் 2023 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

காவியமா? இல்லை ஓவியமா?

கோலமயில் அணைப்பில் கோலமிட்ட நீரோசை
ஆலமர விழுதாய் அவனிவந்த “பா”ரதம்
எண்ணங்களை விதைத்த ஏற்றமிகு கவிஞன்
கண்ணுக்குக் கண்ணான கண்ண தாசனவன்
விண்ணுக்கு விரைந்திட்ட வித்தாரப் புலவன்
திண்ணிய மனத்தின் தீஞ்சுவைத் தமிழன்
சிற்றின்பச் சுவையை செதுக்கிய செம்மறவன்
கற்றதோ கைம்மண்ணளவு கற்றுத்தந்தான் உலகளவு
சொற்போர் செய்த சுகந்த வரிகளில்
சிற்பமாய்ச் சிலையாய் சிந்தினான்
முத்துக்களை மானிட இனத்தின்
மாபெரும் கவிஞன் தேனினுமினிய பாக்களில்
தென்றலாய் வீசியவன் பாமரரும் ரசித்திடப்
பாக்களைப் புனைந்து தாமிர பரணியாய்த்
தரணியில் ஓடியவன் சாமரம் வீசியே
சந்தனமாய்க் கமழ்ந்து காமத்தைக் கனிரசமாய்க்
கன்னியரில் உண்டவன் உணர்வுகளின் புனிதத்தை
உயிராக மதித்து கணப்பொழுதும் வாழ்வியலில்
கவிதையாக வாழ்ந்தவன் பணத்தின் அரங்கினைப்
பந்தியிற் கண்டு பிணமாகும் நிலையினை
படம்போட்டுக் காட்டியவன் அர்த்தமுள்ள இந்துவாய்
ஆயிரம் கடமைகள்சொல்லி சர்ப்ப யாகத்தில்
சான்றுகளை எரித்து சொர்க்க வாசல்
செல்லும் தருணம் கர்த்தரைப் பாடிக்
காவியமும் படைத்தானே.


தமிழ்நெஞ்சம் அமின்