12/30/2025

மின்னிதழ் 18

மே – ஜூன் 2023

வனத்தைச் சுமக்கும் சிறு விதை போல், இளம் வயதிலேயே பன்முகத் திறமைகளுடன் வலம் வரும் ஓர் ஆளுமையை அறிமுகப் படுத்துவதில் முத்தமிழ் கலசம் பெருமை கொள்கிறது.

கிழக்கிலங்கையின் முத்துக்குளிக் கும் முதுமை ஊரான மூதூர் மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட மூதூர் ஜே.எம்.ஐ எனும் புனை பெயரில் ஆக்கங்கள் படைக்கும் ஓர் இளம் எழுத்தாளரே ஜுனைட் முஹமட் இஹ்ஷான்.தனது 28ஆவது வயதிலேயே மூன்று நூல்களை வெளியீடு செய்துள்ளதோடு, இவ்வாண்டு நடுப்பகுதியிலேயே தேடோடி பாகம் 1 என்ற கட்டுரைத் தொகுப்பு நூலையும் வெளியீடு செய்யவுள்ளார். ‘முத்திதழ்’ எனும் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் செயற்பட்டு வருகிறார். இவர் இலக்கியத்துறையில் மிக நீண்ட முதிர்ச்சியையும், அனுபவத்தினையும் பெற்றுள்ளார் என்பதற்கு அவரின் படைப்புகளே சான்று பகரும்.

மேலும் …