12/22/2024

மின்னிதழ் 21

மேலேயுள்ள நவம்பர் – டிசம்பர் 2023 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

வெற்றி வசமாகும்

உனது உள்ளம் கொண்ட வலி
உனது வலிமை கொண்டே சரியாகும்
உள்ளத்தின் ஏக்கம் ஒருபோதும் குறையாது
உறுதியினை ஏற்று கனவினை உருவாக்கும்
உயர்ந்த நேர்மறை சிந்தனை உருவாகி
உனது செயலின் மூலம் வடிவாகும்
உனக்கு ஊக்கத்தினை நீயே அளித்து
உயர்ந்த ஆற்றலை நீயே பெற்றுக்கொள்
உனது கனவு நெடுந்தூரப் பயணம்
உழைப்பின் மீது நம்பிக்கை வை
உன் கனவினை முயற்சி நிறேவேற்றும்
உன் தோல்வியும் தோல்வியடையும் நேரமிது
உயரத்தில் நீ பறக்க சக்தி
உன் விடாமுயற்சியுடன் எப்போதும் உனக்குளிருக்கும்
உன் துணிவு  துணை புரியும்
உள்ளம் உனக்கு வலிமை சேர்க்கும்
உன் திறமைக்கு வாய்ப்பு அருகில்
உன் நோக்கம் நிறைவேறும் விரைவில்
உனக்கான நேரம் துணிந்து செயல்படு
உனது எண்ணம் கைகூடும் விரைவில்
உறக்கத்தை நீயும் தள்ளி வை
உணர்வுக்கு மதிப்பளித்து கனவினை இழக்காதே
உனது கடின உழைப்பு பாதையை எளிதாக்கும்
உன் வெற்றி வசமாகும் உன்னிடத்தில்

க.பூமணி