03/07/2026

காத்திருக்கிறேன்

நிதானமாக எழுந்தார் ராகவன். பொறுமையாக மனைவி கொடுத்த காஃபியை ருசித்துப் பருகினார். பிள்ளைகளின் அறைக்குள் நுழைந் தார். அவர்களுக்கு நடுவே படுத்துக் கொண்டார். அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டான் மூத்தவன். வயிற்றில் கை போட்டுக் கொண்டு அவர் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான் இளையவன்.
இருவரும் ஒரே நேரத்தில் கண் விழித்துப் பார்த்தார்கள். யாரின் கழுத்தைப் பிடித்திருக்கிறோம்? யாரின் வயிற்றில் கை போட்டிருக் கிறோம்?

எண்ணமடை திறந்தது

சின்னயிடைப் பெண்ணழகைத் தாங்கும்!
சிந்தையதைத் தினமெண்ணி ஏங்கும்!
அன்னநடை காட்டிநடம் ஆடும்!
அவளழகைக் குயிலினங்கள் பாடும்

கன்னிவுடல் பொன்னிறத்தைக் காட்டும்!
கவியுள்ளம் கற்பனையை நாட்டும்!
உண்ணத்தடை போடுவதேன் நெஞ்சம்!
உடல்முழுதும் வெப்பநிலை விஞ்சும்!

பிரார்த்தனை

மதமெங்கே நிறமெங்கே சாதி யெங்கே?
மதில்கட்டிப் பிரித்தவர்தம் மமதை யெங்கே?
மார்க்கத்தை வழிமுறையைத் தவற விட்டு
மதம்பிடித் தலைந்திட்ட கூட்ட மெங்கே?
எதுபிழையோ? எதுதவறோ? எதனால் தானோ
இச்சிறிய வைரஸெமைத் தாக்கிற் றிங்கே!

ஒருசிறிய “கொரொணா” வை ஏவி விட்டு
ஓரிறையே எமையெல்லாம் சோதித் தானோ?
ஒன்றுஇறை, ஒன்றுகுலம் என்றிட் டானோ?
ஒன்றுமறி யாதிருந்து வருந்து கின்றோம்!