12/30/2025

மின்னிதழ் 16

சனவரி – பிப்ரவரி 2023

மேலேயுள்ள சனவரி – பிப்ரவரி 2023 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

பாவலர் மணி இராம வேல்முருகன்

இந்த மாத முத்தமிழ் கலச இதழில் அறிமுகமாகும் கவிஞர் இந்தியாவைச் சேர்ந்தவர்; தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் என்ற ஊரில் பிறந்தவர். திருவாரூர் மாவட்டம் தமிழ்ச்சான்றோர்களுக்குப் பெயர் பெற்ற ஊர். ஆரூர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் தியாகராசர் சுந்தருக்காக வீதிகளில் நடந்த பெருமை திருவாரூருக்கு உண்டு. தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் வாழ்ந்த ஊர். திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளைதான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊர் . திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில்தான் கவிஞர் பிறைசூடன் திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் பிறந்துள்ளனர். இன்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் ஆரூர் தமிழ்நாடன் பட்டி மன்ற நகைச்சுவைப் பேச்சாளர் சண்முக வடிவேல் ஆகியோரோடு திருவாரூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்ப்பவர் இந்தக் கவிஞர். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் பிறந்த ஊரான உத்தமதானபுரம் வலங்கைமானுக்கு அருகில் தான் உள்ளது. ஆங்கிலேயர் பாராட்டிய வெள்ளிநாக்கு வீரர் சீனிவாச சாஸ்திரி அகிலஉலகத்தவிலிசைச் சக்கரவர்த்தி வி.எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர் பிறந்த ஊரில் பிறந்தவர்தான் இந்தக் கவிஞர். 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் மற்றும் தூயதமிழ்ப் பற்றாளர் விருதுகளைப் பெற்ற பாவலர் மணி இராம வேல்முருகன் அவர்களே இம் மாத அறிமுகப் கவிஞர் ஆவார்.