விளக்கணித் திருவிழா
விளக்கின் ஒளியாம் விளக்கணித் திருவிழா!
விலகிப் போகும் விரைவாய்த் தொற்றும்!
மீண்டும் வசந்தம் மீள வேண்டும்!
ஆண்டு முழுதும் அமைதி வேண்டும்!
கடந்த நாட்கள் மனத்தின் பாரம்!
கடந்து போவோம் நீண்ட தூரம்!
விழாக்கள் வரட்டும்! விடியல் தரட்டும்!
அழைப்போம் நட்பை! அன்பின் உறவை!
இனிதாய் வாழ்த்த இனிமை சேரும்!
தனிமை போக்கித் தவிப்பை நீக்கி
மனத்தை மகிழ்வாய் மாறச் செய்வோம்!
இணக்க மிருந்தால் எதுவும் முடியும்!
தித்திப் பான தீஞ்சுவை இனிப்பு!
மத்தாப் பூவாம் மலராய்ச் சிதறும்!
ஒலிக்கும் வெடிகள் ஓசை கூட்டும்!
களிப்பாய்ப் பண்டிகைக் காட்சி அழகே!
முனைவர் ஓசூர் மணிமேகலை
தமிழ்நாடு – இந்தியா
நட்புறவுகள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்..
முத்தமிழ் கலசம் மின்னிதழ் மிகச் சிறப்பாக வெளிவந்துள்ளது..
படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.. இதில் எனது கவிதையும் இடம் பெற்றுள்ளது..
அகமகிழ்கிறேன்.. நன்றி வபீரா வபீ தோழி..
இன்னும் இன்னும் சிறப்புகளுடன் முத்தமிழ் கலசம் வெளி வர வாழ்த்துகள்..