09/27/2025

மின்னிதழ் 10

மேலேயுள்ள ஜனவரி – பிப்ரவரி 2022 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

ஆளுமை அறிமுகம்

ஸைத்தூன் நஹார்

கொழும்பை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஸைத்தூன் நஹார் இந்தப் புத்தாண்டு இதழை அலங்கரிக்கிறார். இவர் மர்ஹூம்களான முஹமட் ஜௌஃபர், ஷகீலா தம்பதிகளின் புதல்வியாவார். இவர் கொழும்பு அல்-நாஸர் கல்லூரியில் உயர்தரம்(கலைப்பிரிவு) வரை கற்றவர். சமையலிலும் கைவினைப் பொருட்கள் செய்வதிலும் கைதேர்ந்தவர். பல மொழிகளைக் கற்பதிலும் ஆர்வம் காட்டி வருபவர். சிறந்த குரல் வளமும் ஆற்றல்களும் கொண்டு மிளிரும் இவர் பல நாடகங்களில் நடித்திருப்பதுடன், பாடல், கவிதைகளென கலைகளுடன் சங்கமித்தவர். சன்மார்க்கக் கல்வியையும் கற்றொழுகும் இவர் பேர், புகழை விரும்பாத நல்லுள்ளம் படைத்தவர். தற்போது ரிதம் தொலைக்காட்சியில் ‘பொக்கிஷம்’ எனும் நிகழ்ச்சியின் மூலம் ஆளுமை மிக்க பல பெண்களை மிகச் சிறப்பான முறையில் நேர்காணல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இவரின் சமூகசேவையானது இலங்கை உட்பட, உலகின் பல பாகங்களிலும் உள்ள வாழ்வாதாரமற்ற பல்லாயிரம் ஏழைகளை வாழ்வித்து வருகிறது. இவரின் சிறுவயதிலிருந்தே இல்லாதோருக்கு உதவவேண்டுமென்றிருந்த கனவு மெய்ப்பட இவரின் உழைப்பும் விடாமுயற்சியும் கைகொடுத்துள்ளன. அதோடு (உதவும் கரங்கள்) helping hand Zaithoon Nhar foundation எனும் தொண்டு நிறுவனத்தை 2017 ஆம் ஆண்டு நிறுவி, உலகளாவிய ரீதியில் உதவி தேவைப்படுவோருக்கெல்லாம் தன் நேசக்கரங்களை நீட்டி அரவணைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த வெற்றிகரமான முயற்சிக்குப், பல தாராள மனப்பான்மையுள்ள பொதுநல சேவை மனப்பான்மை கொண்ட பலரும் கரம் கோர்த்து உதவி வருவதும் பாராட்டுக்குரிய விடயமாகும். இவரில் துளிர்த்த மனிதநேயம், பல்லாயிரம் மக்களின் மனங்களிலும், அவர்களின் இருகரமேந்திய பிரார்த்தனைகளிலும் இவரை இருத்தியுள்ள தென்றால் மிகையாகாது.

இவரின் அன்புக் கணவரும் மூன்று பிள்ளைகளும் இவரின் மனித நேயத் தொண்டுக்கு உறுதுணையாக இருந்து வருவதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வாழ்வில் எதிர்கொண்ட இன்னல்களை எல்லாம் தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டு வென்று,தன் இலக்குகளை நோக்கி வீறுநடை போடும் மனிதநேயமிக்க பன்முகத் திறமையுள்ள சாதனைப்பெண் ஸைத்தூன் நஹார் சகோதரிக்கு முத்தமிழ் கலசம் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

13 thoughts on “மின்னிதழ் 10

  1. I’ll immediately snatch your rss as I can not in finding your email subscription hyperlink or e-newsletter service. Do you’ve any? Please allow me know so that I may just subscribe. Thanks.

  2. I get pleasure from, cause I found just what I used to be having a look for. You’ve ended my 4 day lengthy hunt! God Bless you man. Have a nice day. Bye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *