08/04/2025

மின்னிதழ் 11

அறிமுகம் / மின்னிதழ்

மார்ச் – எப்ரல் 2022

மேலேயுள்ள மார்ச் – ஏப்ரல் 2022 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

கவியருவி சாரதா சந்தோஷ்

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பல தமிழ்க் குழுக்களில், தளங்களில் நிர்வாகி, தொகுப்பாசிரியர், இலக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் , கவியரங்கத் தலைமை, உலகளாவிய கவிஞர்கள் ஒருங்கிணைப்பாளர், போட்டி நடுவர், பத்திரிகையாளர், மின்னிதழ் இணை ஆசிரியர்..

நிறை இலக்கிய வட்டத்தில் செயல் உறுப்பினராக, புனே நமஸ்தே இந்தியா மின்னிதழில் இந்திய ஆலோசகராக, புதிய திசைகள் இணைய தளத்தில் இணை ஆசிரியராக, திசைகள் வானொலியில் நிலைய இயக்குனராக இரண்டு வருடங்கள், உலகத் தமிழ் ஹைக்கூ மன்றத்தில் நிர்வாகியாக, தன்முனைக் கவிதைகள் குழுமத்தில் நிர்வாகியாக, ஹைக்கூ படர் பார்வை. ஒரு கவிஞனின் கனவு குழுமங்களின் நிர்வாகியாகியென பல்வேறு தமிழ் அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து வழங்கிய சிறந்த எழுத்தாளருக்கான விருது, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை வாயிலாக சர்வதேச பெண் சாதனையாளர் பன்முகக் கலைஞர் விருது (2021) மித்ரா துளிப்பா விருது, நிறை முத்து விருது, துளிப்பா இளவரசி விருது, சர்வதேச பெண் சாதனையாளர் விருது, கவியருவி விருது, NFED வழங்கிய International Women Achiever விருது உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார்.

வெளியிட்ட நூல்கள் ஒரு துளி கடல் (புதுக்கவிதை) மின் கம்பியில் குருவிகள் (ஹைக்கூ வகைமை) மற்றும் தொகுப்பாசிரியராக தமிழே எங்கள் தலைமை (2021) (பன்னாட்டுக் கவியரங்கக் கவிதைகள் தொகுப்பு நூல்) என்பனவாகும்.

எஸ்.யூ. கமர்ஜான் பீபீ

வத்தளை ஹுனுப்பட்டியை பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.யூ. கமர்ஜான் பீபீ இலக்கிய உலகில் பேசப்படும் ஓர் ஆளுமைமிக்கவர்.கடந்த 1988 களில் சபதம், மருதம் ஆகிய இரு இலக்கிய சஞ்சிகைகளில் ஆசிரியராகவிருந்தும் இலக்கியப்பணி புரிந்த இவர், தனது ஊரிலிருந்து முதல் பெண் சமாதான நீதிபதியாகவும் திகழ்கின்றவர். ஹுனுப்பிட்டிய இலக் கிய வட்டம், பழைய மாணவ சங்கம், ஐக்கிய முஸ்லிம் மாதர் ஒன்றியம் ஆகியவற்றின் செயலாளராக கடமை யாற்றும் இவர் பயிற்றப் பட்ட பாலர் பாடசாலை ஆசிரியருமாவார். அஹதியா பாடசாலையின் அதிபராக வும் செயற்பட்டுள்ளார். உளவளத் துணை யாளராகவும் இயங்கி வருகின்றார்.

இலத்திரனியல், அச்சு, சமூக வலைத் தளங்கள் என்ற மூன்று கால மாற்ற ஊடக வளர்ச்சியிலும் இவரின் பங்களிப்புண்டு. கவிதைத் துறை மட்டுமல்லாமல் சிறுகதை, கட்டுரை, நாடகம், விவாதம், வில்லுப்பாட்டு (இஸ்லாமிய வரலாறுகளில்) பாடல் கள் சித்திரம் போன்ற துறைகளில் பிரகாசிப்பவர்.

மாவட்ட ரீதியில் சித்திரப் போட்டி யிலும் பேச்சுப் போட்டி, பாடல் போட்டிகளிலும் பங்கு பற்றி பரிசு களைப் பெற்றுள்ளார்.

சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபடு பவர். பழைய மாணவர் சங்கத்தை 1986 இவரே ஆரம்பித்து செயலாள ராக இருந்து சங்கத்தால் நிறைய சேவைகள் செய்து வருகிறார். ஹுனுப்பிட்டிய இலக்கிய மன்றத்தை ஆரம்பித்து இணை செயலாளராகவும் சேவை புரியுமிவர், களனி பிரதேச சபை யில் கலாக்கரு கலை இலக்கிய வட்டத்திலும் அங்கம் வகிக்கிறார்.

2017 ல் “நான் மூச்சயர்ந்தபோது” என்னும் கவிதை நூலை வெளியிட்ட கமர்ஜான் பீபீ தன் இரண்டாவது புத்தக வெளியீட்டிற்கான ஆயத்தங் களில் ஈடுபட்டுள்ளார்.

கவிதாயினி மணிக்கூ கவி நஸீரா எஸ் ஆப்தீன்

மணிக்கூ கவி நஸீரா எஸ் ஆப்தீன் ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுமார் 17 வருடங்கள் ஆசிரியராகவும், 20 வருடங்கள் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமை புரிந்து தனது 55 ஆவது வயதில் ஓய்வு பெற்றவர்.

அரச பணி ஓய்வின் பின், 2018 ஆம் ஆண்டிலே இலக்கியத் துறையில் காலடி வைத்த இவர், இக்குறுகிய காலப்பகுதியில் பல இலக்கிய வெளிப்பாடுகளைக் காட்டியுள்ளார். «ஹைக்கூ வில் கரைவோமா?» என்ற ஹைக்கூ ஆய்வு நூலையும்(2020 பெப்ரவரி) ‘‘வானும் மண்ணும் நம் வசமே..’’ என்ற இலங்கையின் முதலாவது தன்முனைக் கவிதைகள் நூலையும் (2020 ஆகஸ்ட்) ‘‘புத்தொளிக் கவிதைகள்’’ என்ற உலகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலையும் (ஒக்டோபர் 2021) ‘‘பாரதிக்கு பதில் மடல்’’ என்ற கவிதைத் தொகுப்பையும் (டிசம்பர் – 2021) வெளியிட்டுள்ளார்.

திரிபடைந்த ஹைக்கூ வடிவங்களை சார்ந்ததாக விடுகவிக்கூ, மணிக்கூ என்ற இரு புதிய ஹைக்கூ வடிவங்களையும் புத்தொளிக் கவிதைகள், கூம்புக் கவிதைகள் ஆகிய புதிய கவிதை வடிவங்களையும் இவர் கவியுலகுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார்.

கல்வித்துறையில் சாமஸ்ரீ வித்தியா ஜோதி, கல்விச்சுடர் போன்ற விருது களையும், இலக்கியத் துறையில் பட்டுக் கோட்டை கண்ணதாசன் விருது, பேரறிஞர் அண்ணாவிருது, கவி அலரி விருது, மணிக்கூ கவி விருது, சந்தப்பாமணி விருது, இசைக்கவி விருது, கவி மின்னல் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

புத்தொளி கலை இலக்கிய பண் பாட்டுக் குழுமம் என்ற குழுமத்தை முகநூலில் தொடங்கி பல்வேறு வகையான கவிதைப் போட்டிகளை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்.

சித்தி மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பி டமாகவும் கொண்டவர். இவர் 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் எழுதவாரம்பித்தார்.

கவிதை,சிறுகதை , கட்டுரை, நாடகம், பாடல், வில்லுப்பாடல், தாளலயம் பேச்சு, சித்திரம், கைப்பணி, சஞ்சிகை என பல்துறைகளிலும் கைதேர்ந் தவராவார்.

மாவடிப்பள்ளி கமு அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணி புரியும் இவர், மொழித் தேர்ச்சியி லும் படைப்பாக்கத்திறனிலும் மாணவர் களை சிறந்த அடைவைப் பெறச் செய்தவர்.

2017ல் கலாசார அலுவல்கள் திணைக்களம் வழங்கிய ‘‘கலைஞர் சுவதம்’’ விருது உட்பட இலக்கியத் திற்காக பதின்மூன்று விருதுகள் பெற்றிருக்கிறார். கடந்த வருடம் (2021) ‘நதிகளின் தேசியகீதம்’ எனும் இவரது சுயகவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது.தவிரவும், அறுபத்து மூன்று முஸ்லீம் பெண்களின் கவிதை களைத் தொகுத்து, ‘‘சுட்டுவிரல்’’ எனும் கவிதைத் தொகுதியையும் வெளியிட்டி ருக்கிறார். இதுவே இலங்கையில் முஸ்லீம் பெண்களின் முதலாவது கவிதைத் தொகுதியுமாகும். அச்சு, றோணியோ, கையெழுத்து என முப்பதுக்கு மேற்பட்ட சஞ்சிகைகளை வெளியிட்டிருக்கிறார். கையெழுத்தாக ஆரம்பித்து றோணியோவில் முடிவுற்ற ‘நிறைமதி’ சஞ்சிகை எண்பது காலப் பகுதிகளில் தேசியமட்டத்தில் வெளியிடப்பட்டதாகும். காலாண்டு சஞ்சிகையான ‘‘நிறைமதி’’ இருபத்தி இரண்டு இதழ்களை வெளியிட்டிருந்தது.

தனது மாணாக்கர்களின் கவிதை களைத் தொகுத்து இரண்டு தொகுதி கள் ரோணியோவில் வெளியிட்டி ருக்கிறார். மாணவர்களை வழிநடத்தி வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைகள் நான்கு தடவைகள் மாகாணமட்டத்தில் வெற்றியீட்டி யிருக்கின்றன.

பாடலாக்கம்,கவிதை,சிறுகதை, நாடகத் தயாரிப்பு என தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.இவரது பன்னிரெண்டு நாடகங்கள் மாவட்டம், மாகாணம், தேசியமட்டம் என்ற ரீதியிலும், தேசிய மட்டத்தில் மூன்று நாடகங்கள்(பள்ளி) எனவும் வெற்றியீட்டியுள்ளன. தேசிய மட்டத்தில் நாடகத் தயாரிப்பிற்கான விருதும் பெற்றுள்ளார். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் அங்கம் வகித்து பணியாற்றி வரும் இவர் 2021 ல் Sri Lanka pen club என்ற பெண் எழுத்தாளர் அமைப்பொன்றினை நிறுவி ஆற்றலுள்ள பெண்களுக்கு களம் அமைத்துத்தரும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.அதன் முதற்கட்ட முயற்சியாகவே கடந்த 2021.01.18ம் தேதி தேசிய ரீதியிலான பெண் எழுத்தாளர் மாநாடு ஒன்றினை நடாத்தி ‘சுட்டு விரல்’ பெண்களின் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது.

அன்புச்செல்வி சுப்புராஜூ

அன்புச்செல்வி சுப்புராஜூ. தமிழ் நாட்டில் உள்ள தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பிறந்தவர். தன் முனைக்கவிதை படைப்பாளர்கள் பேரவையின் செயலாளராகவும் மற்றும் அன்பின் சங்கமம் சிறுவர் உலகத்தின் நிறுவனராகவும் உள்ளார். ஆடையலங்காரம் மற்றும் வடிவமைப்பு படித்துள்ளார்.

இவர் உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர் கள் மன்றத்தின் நிர்வாகியாக ஹைக்கூ உலகிலும், தன்முனைக் கவிதை குழும நிர்வாகியாக தன்முனைக்கவிதை உலகிலும் பயணித்து வருகிறார்.

பல குழுமங்கள், அமைப்புகளின் வழியாக கவி வேந்தர், அப்துல் கலாம் விருது, கவியருவி, கவிச்சாகரம், அமுதகவி, கவியமுது, கவி இமயம், கவிச்சூரியன், கவியரசி, பன்னாட்டு பெண்கள் அமைப்பு வழங்கிய ‘‘தேன்மொழி விருது’’ தமிழ்ப்பட்டறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இணைந்து வழங்கிய கவிச்செம்மல், அம்மா தமிழ்ப்பீடம் வழங்கிய ‘‘பாவரசு’’, தென்னிந்தியக் கலை மற்றும் கலாச்சார மையம் வழங்கிய ‘‘கவிதைக்கலை வித்தகி’’ உள்ளிட்ட இன்னும் பல விருதுகளோடு கம்போடிய அரசுடன் இணைந்து அங்கோர்வாட் தமிழ்ச்சங்கம் அளித்த ‘‘சர்வதேச பாரதியார் விருது’’ பெற்றவர்.

ஏறக்குறைய பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களுக்கு இணை தொகுப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவரின் தனிப்பட்ட நூல்களாக மே 2017 ல் ‘‘அன்பின் கவிதைகள்’’ (புதுக்கவிதை), ஏப்ரல் 2018 ‘‘நிலவோடு நான்’’ (குறுங்கவிதை), மே 2018 ‘‘துளிர்க்கும் மரம்’’ (ஹைக்கூ) என்பனவற்றோடு 2020 ல் வெளிவந்த ‘‘மகரந்தம் தூவும் மலர்கள்’’ (தன்முனைக் கவிதை முதல் பெண்கள் தொகுப்பு) பன்னாட்டுப் பெண்களின் தன்முனைக் கவிதைகள் இடம் பெற்றுள்ள முதல் பெண்கள் தொகுப்பு என்ற சிறப்பைப் பெற்றது.

பல பெண் கவிஞர்களின் கவிதைக ளடங்கிய நூல் மார்ச் 8, 2021 பெண்கள் தினத்தன்று வெளியிடப்பட்ட’’மலர்கள் தீட்டிய வரைவுகள்’’ (தன்முனைக் கவிதைகள்) ‘‘புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்ட்’’உலகசாதனை நூலாகும்.

ஏப்ரல் 2021 ‘‘மகரந்தத்தின் தேடல்கள்’’ (புதுக்கவிதை)

நவம்பர் 2021 ‘‘இமயம் தொடும் இயைபுகள்’’ (தமிழில் பெண் படைப் பாளர்களின் முதல் லிமரைக்கூ தொகுப்பு நூல்)

டிசம்பர் 2021 ‘‘குட்டி மேகங்கள் தூவிய தூறல்கள்’’ (சிறுவர் கதைகள், தொகுப்பு நூல்)

டிசம்பர் 2021 ‘‘வாண்டுகள் சொன்ன கதைகள்’’ (சிறுவர் கதைகள், தொகுப்பு நூல்) வெளிவந்துள்ளன.

இவர் எழுதிய தன்முனைக் கவிதை கள் ‘‘லாந்தர் விளக்கின் வெளிச்ச சிதறல்கள்’’ நூலாக அச்சிடப் பட்டு இவ்வாண்டின் முதல் நூலாக வெளிவந்துள்ளது. இன்னும் வெளிவரவுள்ள நூல்கள்…

‘‘இங்காவின் ஆலாபனைகள்’’ (குழந்தை கள் குறித்தான முதல் தன்முனைக் கவிதை நூல்)

‘‘நறுமுகை யாளிகள்’’ (பெண்கள் சிறுகதைத் தொகுப்பு)

‘அ’ ~ அன்பின் அகராதி (அன்பின் சங்கமம் சிறுவர் உலகம் குழந்தைகள் எழுதிய தன்முனைக் கவிதைகள்) என்பனவாகும்.

திருமதி . சரஸ்வதி பாஸ்கரன்

படிப்பு – வேதியியலில் முதுகலைப் பட்டம், கல்வியியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டம், உளவியல் மற்றும் ஆலோசகர் படிப்பில் முதுகலை பட்டையம். வாழிடம் – திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. பணி – வேதியியல் துறை மற்றும் கல்வியியல் துறை சிறப்புப் பேராசிரியை.

மரபு நூல்களான காற்றினில் தெறித்த கனவுகள், மௌனத்தின் விலை யென்ன, ஊஞ்சலாடும் உறவுகள் ஆகிய நூல்களை வெளி யிட்டுள்ளார் மேலும் இருபது நூல்களுக்குத் தொகுப்பாசிரி யருமாவார்.
.
பெற்ற விருதுகள் பைந்தமிழ்ப் பாமணி, கவிச்சிகரம் கவிக்காவிரி, ஆளுமைச்செம்மல், கவிச்செம்மல், இசைக்கவி, கவி இமயம், கவிச்சோலை, நிலாக்கவிஞர், அமுதகவி, கவிநிலா, கவிமாமணி, கவிபாரதி, கவியாழினி, கவியருவி, கவிச்சாகரம், கவி வித்தகர, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கப் புலவர் விருது, கவிப்பேரொளி விருது, புரட்சிக் கவி, தமிழ்ச்செம்மல், தமிழ்மாமணி, வெண்பா வேந்தர், மரபு சுடரொளி, புரட்சிக்கவி, தங்கமகள் விருது. உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் சார்பில் தமிழ்த்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கிய தமிழ்ச்சேவைக்கான சாதனைச் சிகரம் விருது, பாவேந்தர். பாரதிதாசன் விருது இப்படிப் பல…

பள்ளி இறுதியாண்டு மாணவர்களுக்கு வேதியியல், கணிதம், இயற்பியல், ஆங்கில இலக்கணம், தமிழ் இலக் கணம் கற்பித்தல், உளவியல் ஆலோ சகர் மற்றும் வழிநடத்துனர். 8 முறை வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள திருமதி. சரஸ்வதி பாஸ்கரன் அவர்கள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விருதுகளைக் குவித்துள்ளார். கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன் அவர்களின் இடையறாத தமிழ்ப்பணி யைப் போற்றி அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக் கழகம் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மோகன் ஜெனிதா

மத்தியமுகாம்-2 நாவிதன்வெளியை பிறப்பிடமாகவும் நற்பிட்டிமுனை-2 கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கிறார். கிழக்கு பல்கலைக் கழகத்தில் சமூகவியல் சிறப்புக் கற்கையை மேற்கொண்டு முதல் வகுப்பில் சித்தி பெற்ற இவர், ஒரு வருடம் தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணி புரிந்தார். கவிதை, கட்டுரைகளை பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளுக்கு எழுதி வருகிறார். வாழ்த்துப்பாக்கள் பலவும் எழுதியுள்ளார்.

2012-2018 ஆம் ஆண்டு வரை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராக நாவிதன்வெளி பிரதேச செயலகத் தில் கடமை புரிந்த இவர், அதனைத் தொடர்ந்து காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று வரை கடமை புரிந்து வருகிறார்.

தற்போது கல்முனைநெட் பத்திரிகை யின் மங்கையர் பகுதிக்குரிய ஆசிரிய ராக இருக்கின்றார். ‘சமூகவியல்’ எனும் தலைப்பில் 13 கட்டுரை களின் தொகுப்பு அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியீடு செய்திருக்கிறார். பெண்களுக்கு எதி ரான வன்முறைகளும், அதற்கான தண்டனைகளும் அடங்கிய கையேடு கள் இரண்டினை வெளி யிட்டுள்ளார். மேலும் பட்டிமன்றங்கள், கவிரயங் குகளில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்.

சிறுவர்கள் துஷ்பிரயோகம், பெண் களுக்கு எதிரான வன்முறைகள், மது ஒழிப்பு, பெண்கள் உரிமைகள், தலைமைத்துவம், மனித உரிமைகள், நல்லிணக்கம், பால்நிலை சமத்துவம் போன்ற தலைப்புக்களில் வளவாளராக வும் பங்குபற்றிக் கொண்டி ருக்கின்றார்.

கல்முனை பிராந்திய மனித உரிமை குழு அங்கத்தவராகவும், வேள்வி அமைப்பின் செயலாளராகவும், அம்பாறை வலு விழப்புடன் கூடிய நபர்களுக்கான வலையமைப்பின் பொருளாளராகவும், அம்பாறை பெண்கள் வலையமைப்பின் செயலாளராகவும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயலணியின் சமூக நல்லிணக்க குழுவின் செயலாளராகவும், சமாதானமும் சமூகப்பணியும் நிறு வனத்தின் நல்லிணக்க குழுவின் உறுப்பினராகவும் செயற்படுவதுடன் பல்வேறு சமூகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஜெனிதா பன்முக ஆளுமையுடையவர்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

எழுத்தாளர், இதழாசிரியர், ஊடகவிய லாளர், கவிதாயினி என பன்முகத் திறமைகள் கொண்ட ஆளுமை மிக்கவர். இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகரும் தலைவியுமாவார் ‘பூங்காவனம்’ எனும் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். பலதரப்பட்ட ஆளுமைகளை பல ஊடகங்கள் மூலம் நேர்காணல் செய்தவர். ஊடகத் துறையில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியை கொழும்பு பல்கலைக் கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார்.

இதுவரை பல இலக்கிய அமைப்புகள் மூலமாக சாமஸ்ரீ கலாபதி, சாதனைக்குரிய மகளிர், கவிச்சுடர், கலாபிமானி,கலைமதி,கவித்தாரகை போன்ற விருதுகளைப் பெற்றவர்.

அவர் வெளியிட்ட நூல்கள்

வங்கிக் கணக்கிணக்கக் கூற்று (கணக்கீடு) 2004
கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) 2008
கணக்கீட்டின் தெளிவு (கணக்கீடு) 2009
தென்றலின் வேகம் (கவிதை) 2010
ஆடம்பரக் கூடு (சிறுவர் கதை) 2012
என்ன கொடுப்போம் (சிறுவர் கதை) 2012
பாடல் கேட்ட குமார் (சிறுவர் கதை) 2013
இதுதான் சரியான வழி (சிறுவர் கதை) 2013
கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்) 2013
வண்ணாத்திப்பூச்சி (சிறுவர் பாடல்) 2014
அறுவடைகள் (விமர்சனம்) 2015
எரிந்த சிறகுகள் (கவிதை) 2015
விடியல் (ஆய்வு) 2017
எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம் (ஆவணம்) 2021 என்பனவாகும்.

Dr ஜலீலா முஸம்மில் MBBS (SL)

இலங்கை நாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்டவர்.

கடந்த 14 வருடங்களாக வைத்திய அதிகாரியாக கடமை புரிந்து வருகிறார். மருத்துவக் கல்வியை கொழும்பு களனிப் பல்கலைக்கழகத்தின் றாகமை மருத்துவ பீடத்தில் கற்று முடித்தார். தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமை புரிகிறார்.தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் கடமை புரிந்தவர்.

சிறீலங்கா பென் கிளப் எனும் இலங்கை நாட்டின் பெண் எழுத்தாளர்கள் அமைப்பில் அங்கத்துவம் வகிப்பதோடு, உபதலை வராகவும், ஸ்ரீலங்கா பென் கிளப் முகநூல், வட்சப் பக்கத்தில் மருத்துவப் பகுதிக்குப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். நம் முத்தமிழ் கலசம் இதழிலும், இவர் மருத்துவக் கட்டுரைத் தொடரை எழுதி வருவதும் குறிப்பிடத் தக்கது.

கட்டார் நாட்டிலிருந்து வெளிவரும் துணிந்தெழு சஞ்சிகையின் மட்டக் களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரா கவும் செயல்படும் இவர் கடந்த மாதம் 27 ஆம் திகதி தனது கன்னி நூலான ‘சிறகு முளைத்த மீன்‘ எனும் நூலை சென்னையில் வெளி யிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.எழுத்துலகில் இன்னும் வளர வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்குண்டு.

முனைவர் நிர்மலா சிவராசசிங்கம்

இலங்கையைத் தாயகமாகக் கொண்ட இவர் தற்போது சுவிற்சலாந்தில் வாழ்ந்து வருகிறார். தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர். தமிழ்மணிப் புலவர் மரபுக்கவிதை தேர்வில் கிடைத்த பட்டம். பைந்தமிழ்ச் செம்மல், ஆசுகவி, சந்தக்கவிமணி போன்ற பல விருதுகள் பெற்றவர்.

இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்

எழில் மிகு பூக்கள்
உல்லாசப் பறவைகள்
அந்தமிழ் அறுபது
(மரபு கவிதை)
எழில் விருத்தங்கள்
(மரபு)
ஓடை நிலா
(ஹைக்கூ)
சிந்துகவிச் சாரல்
(சிந்து பாடல்கள்)
என்பனவாகும்.

73 thoughts on “மின்னிதழ் 11

  1. Гидроизоляция зданий https://gidrokva.ru и сооружений любой сложности. Фундаменты, подвалы, крыши, стены, инженерные конструкции.

  2. Заказать диплом https://diplomikon.ru быстро, надёжно, с гарантией! Напишем работу с нуля по вашим требованиям. Уникальность от 80%, оформление по ГОСТу.

  3. Надёжный заказ авто заказать авто из японии с аукционов: качественные автомобили, проверенные продавцы, полная сопровождение сделки. Подбор, доставка, оформление — всё под ключ. Экономия до 30% по сравнению с покупкой в РФ.

  4. Продвижение сайта https://team-black-top.ru в ТОП Яндекса и Google. Комплексное SEO, аудит, оптимизация, контент, внешние ссылки. Рост трафика и продаж уже через 2–3 месяца.

  5. Нужна душевая кабина? душевая кабина цена лучшие цены, надёжные бренды, стильные решения для любой ванной. Доставка по городу, монтаж, гарантия. Каталог от эконом до премиум — найдите идеальную модель для вашего дома.

  6. Outstanding post but I was wondering if you could write a litte more on this topic? I’d be very thankful if you could elaborate a little bit more. Cheers!
    Cheap limo near me

  7. Курс по плазмотерапии прп терапия обучение с выдачей сертификата. Освойте PRP-методику: показания, противопоказания, протоколы, работа с оборудованием. Обучение для медработников с практикой и официальными документами.

  8. Институт государственной службы https://igs118.ru обучение для тех, кто хочет управлять, реформировать, развивать. Подготовка кадров для госуправления, муниципалитетов, законодательных и исполнительных органов.

  9. Публичная дипломатия России https://softpowercourses.ru концепции, стратегии, механизмы влияния. От культурных центров до цифровых платформ — как формируется образ страны за рубежом.

  10. Опытный репетитор https://english-coach.ru для школьников 1–11 классов. Подтянем знания, разберёмся в трудных темах, подготовим к экзаменам. Занятия онлайн и офлайн.

  11. Школа бизнеса EMBA https://emba-school.ru программа для руководителей и собственников. Стратегическое мышление, международные практики, управленческие навыки.

  12. Проходите аттестацию https://prom-bez-ept.ru по промышленной безопасности через ЕПТ — быстро, удобно и официально. Подготовка, регистрация, тестирование и сопровождение.

  13. «Дела семейные» https://academyds.ru онлайн-академия для родителей, супругов и всех, кто хочет разобраться в семейных вопросах. Психология, право, коммуникации, конфликты, воспитание — просто о важном для жизни.

  14. Трэвел-журналистика https://presskurs.ru как превращать путешествия в публикации. Работа с редакциями, создание медийного портфолио, написание текстов, интервью, фото- и видеоматериалы.

  15. Heya this is kind of of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding skills so I wanted to get guidance from someone with experience. Any help would be enormously appreciated!
    how to get cheap vermox no prescription

  16. Свежие скидки https://1001kupon.ru выгодные акции и рабочие промокоды — всё для того, чтобы тратить меньше. Экономьте на онлайн-покупках с проверенными кодами.

  17. «Академия учителя» https://edu-academiauh.ru онлайн-портал для педагогов всех уровней. Методические разработки, сценарии уроков, цифровые ресурсы и курсы. Поддержка в обучении, аттестации и ежедневной работе в школе.

  18. ?аза? тіліндегі ?ндер Казахские хиты ж?рекке жа?ын ?уендер мен ?серлі м?тіндер. ?лтты? музыка мен ?азіргі заман?ы хиттер. Онлайн ты?дау ж?не ж?ктеу м?мкіндігі бар ы??айлы жина?.

  19. Thanks for some other magnificent post. Where else may anyone get that type of information in such an ideal means of writing? I have a presentation next week, and I am on the search for such info.
    doxycycline 200 mg ca

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *