08/04/2025

வாழ்தல் இனிது

நிஷா ரஹ்மான் வாழும் நாட்கள் ஒவ்வொன்றும் கடவுள் நமக்குக் கொடுத்த வரம். நமக்கான வரங்களை கேட்டு வாங்கிக் கொள்ளவே இவ்வாழ்க்கை.சாபங்களை வரவேற்காமல் சந்தோஷங் களுக்கு வழி அமைப்போம். நம்முடைய உள் மனத்தின் அமைதிக்கான சாவி …

ஓருயிர்

ஷெய்க் நிஸ்ரா இரவின் இருளையும், நிசப்தத் தையும் கலைத்தபடி அந்தப் பேரூந்து வளைந்து நெளிந்த பாதைகளினூடே பயணத்தைத் தொடர்ந்தது. பயணிகள் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்திலிருக்க, வயதான ஒரு பெரியவர் மட்டும் இருக்கையில் சாய்ந்தவாறே பலத்த …

நீ எந்தன் மனமேடை

தமிழ்நெஞ்சம் அமின்

மொழிகின்ற பேச்சினிலே
  முல்லைமலர்த் தேன்சொரிவாய் !
விழியென்றக் கருவண்டை
 வீசிடுவாய் மயங்கிடுவேன் !
அழிவில்லாப் பொற்றமிழே
 அறிவாயோ என்னிலமை ?
அருகினிலே இறுத்திவைத்து
 அருங்கவிகள் படைத்திட வா..

இமயமாய் உயர்ந்து நிற்கிறாய்

உன் அகக்கண்களெங்கும் அன்பின் ஊற்று
அழகிய வதனமெங்கும் அமைதியின் ஒளிக்கீற்று
பைந்தமிழின் ஈர்ப்பு உன்னுள் விசையேற்ற
பற்றுக் கொண்டோரை ஈர்க்கிறாய் தமிழ்த்தொண்டாற்ற

விடாமுயற்சியும் பயிற்சியும் கொண்டு – உன்
வெற்றிக்கிட்டாய் உறுதியாய் அடித்தளம்
திறமையுள்ளோரை அரவணைத்து அமைத்துக்
கொடுத்தாய் அவர்கட்குச் சிறப்புக்களம்

எத்திசைப் பறவைகட்கும் வேடந்தாங்கலாய் நீ
எங்கும் நிழல் தேடியலைவோர்க்கும் பெருவிருட்சம் நீ
அடரிருளில் தொலைவோர்க்கு ஒளிவிளக்காய் நீ
கரைகாணா கவிஞர்க்கும் கலங்கரை விளக்காய் நீ

சொல்லத் துடிக்கும் மனசு

ஆச வெட்டி போகல
ஆள விட்டு நீங்கல
கூரப் பட்டு கேட்கல
கொஞ்சங் கூட சரியில்ல…

வெட்கப்பட்டு நிக்கல
வேகம் ஏதும் எனக்கில்ல
ஓடி நீயும் போனாலும்
தேடி நானும் வருவேனே

உயிரில் கலந்த உணர்வே

புரிதலில் விளைந்த புனிதமான காதலிது
தெரிந்த நாள்முதல் விரியும் நேசமிது
பிரியாமல் பிணைகின்ற பிம்பங்கள் இது
விரிகின்ற காதல் முறையான வாழ்வாகுமே

உரமான உண்மைக் காதல் உணர்வானது
தரமான உள்ளங்களின் இணைப்பில் ஆனது
வரமாக வருகின்ற வரவாக நிறைவானது
மரபிலும் மாண்பிலும் உருவான காதலிது

காத்திருக்கிறேன்

நிதானமாக எழுந்தார் ராகவன். பொறுமையாக மனைவி கொடுத்த காஃபியை ருசித்துப் பருகினார். பிள்ளைகளின் அறைக்குள் நுழைந் தார். அவர்களுக்கு நடுவே படுத்துக் கொண்டார். அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டான் மூத்தவன். வயிற்றில் கை போட்டுக் கொண்டு அவர் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான் இளையவன்.
இருவரும் ஒரே நேரத்தில் கண் விழித்துப் பார்த்தார்கள். யாரின் கழுத்தைப் பிடித்திருக்கிறோம்? யாரின் வயிற்றில் கை போட்டிருக் கிறோம்?

எண்ணமடை திறந்தது

சின்னயிடைப் பெண்ணழகைத் தாங்கும்!
சிந்தையதைத் தினமெண்ணி ஏங்கும்!
அன்னநடை காட்டிநடம் ஆடும்!
அவளழகைக் குயிலினங்கள் பாடும்

கன்னிவுடல் பொன்னிறத்தைக் காட்டும்!
கவியுள்ளம் கற்பனையை நாட்டும்!
உண்ணத்தடை போடுவதேன் நெஞ்சம்!
உடல்முழுதும் வெப்பநிலை விஞ்சும்!