முனைவர் ம. தமிழ்ச்செல்வி
மெட்டுச் சொன்னா
பாட்டு வருமா? – நான்
தட்டிப்பார்த்தேன் தெரியாத்தனமா – அது
கொட்டிப் போனது கொஞ்சமல்லவே… (மெட்டு)
ஆச வெட்டி போகல
ஆள விட்டு நீங்கல
கூரப் பட்டு கேட்கல
கொஞ்சங் கூட சரியில்ல…
வெட்கப்பட்டு நிக்கல
வேகம் ஏதும் எனக்கில்ல
ஓடி நீயும் போனாலும்
தேடி நானும் வருவேனே
கூட்ட விட்டு நீ போன
பாட்ட நானும் மறப்பேனே
காட்ட தேடிப் போவேனே
கதறி நானும் அழுவேனே…
உன்ன நானும் பார்க்கனும்
உள்ளதை எல்லாம் சொல்லனும்
உருப்படியா (நாம) வாழனும்
ஊருக்கு ஏதும் செய்யனும்…
