மேலேயுள்ள செப்டெம்பர் – அக்டோபர் 2022 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!
அன்பின் வாசகர்களுக்கு வணக்கம்!
காலச்சூழலும், இயற்கையும் எம்மைப் புரட்டிப் போட்டு பந்தாடும் நிலையில் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டிய தருணமிது. நம்நாட்டில் வாழ்க்கைச் செலவும், காலநிலைச் சீர்கேடுகளும் மிக மோசமாக மக்களின் அன்றாட வாழ்வியலைப் பாதித்திருப்பதால் வீண்செலவுகளையும் பயனற்ற வெளிப் பயணங்களையும் தவிர்த்து, எல்லாவற்றையும் கவனமாகக் கையாள்வோம். அதேசமயம், இந்நேரத்தில் அல்லலுறும் ஒரு சிலருக்காவது எம்மால் இயன்றளவு கைகொடுப்போம். முயற்சித்தால் நம்மால் முடியாதது ஏதுமில்லை. நிரந்தரமே இல்லா இவ்வாழ்க்கைப் பயணத்தில் நம் முகமூடிகளை அகற்றி, நமக்கும் மற்றவர்களுக்கும் உண்மையாகவும் மனிதநேயத்துடனும் வாழக் கற்றுக் கொள்வோம்.
நன்றி!
Wafeera Wafi
