12/22/2024

மின்னிதழ் 13

ஜூலை – ஆகஸ்ட் 2022

மேலேயுள்ள ஜூலை – ஆகஸ்ட் 2022 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

சிறுவயது முதலே தான் கொண்ட தமிழார்வம் காரணமாக தமிழுக் காகவே தன்னை அர்ப்பணித்து சேவைகள் செய்து வருபவர். தம் எட்டு வயதிலேயே ‘சுண்டல்’ எனும் கையேட்டுப் பத்திரிகையை நடத்தியபெருமையும் இவருக்குண்டு.

தமிழ்நெஞ்சம் இதழை கடந்த ஐம்பத்தோரு ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வரும் சாதனையாளர். இவருக்கு சமீபத்தில் சென்ற மாதம் தஞ்சைத் தமிழ் மன்றம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி சிறப்பித்தது. தமிழ்நெஞ்சம் அமின் வெளிநாட்டில் வசித்தாலும், தாய்த்தமிழைத் உயிருக்கு நிகராக உணர்வில் சுமந்து தொண்டுகள் செய்து வருகிறார்.

பல நூல்களை எழுதி வெளியிட்ட இவர் புகழை விரும்பாத தன்னடக்கம் மிக்க பொதுநலத் தொண்டன் என்றால் அது மிகையில்லை.

இவரின் முதல் நூல் (1968) ‘பாழடைந்த பங்களா’ எனும் திகில் நாவலாகும். உறவுகள், கருணை, நியாயங்கள் இப்படியாக கதைகளும், கவிதைகளும் எழுதி இவர் அண்மையில் எழுதி வெளியீடு கண்ட ‘தோழர் சிங்காரவேலர்’ எனும் நூல் தென்னிந்தியாவில் 1860 களில் பிறந்த, முதல் கம்யூனிஸ்ட் சிந்தனைச் சிற்பியான சிங்காரவேலரைப் பற்றி சமூகத்துக்குத் தெரியாத பல விடயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது என்பதும், அதிக அளவில் இந்நூல் விற்பனையாகி யுள்ளன என்பதும் மேலதிகத் தகவலாகும்.

இன்றைய ஆளுமை, பத்திரிகைத் துறை, ஓவியங்கள் வரைதல், இதழ்கள் நூல்கள் வடிவமைப்புச் செய்தல், கவிதை எழுதுதல், நாடகம், நடிப்பு, கணிணி சம்பந்தமான ஆற்றல் வெப் மாஸ்டர், இப்படி பன்முகத் திறமைகள் கொண்டவராய் திகழ்பவர்.

பத்திரிகைத்துறையில் பழுத்த அனுபவ சாலியான இவர், இலங்கை, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் வெளி வரும் பல இதழ்களின் வெற்றிக்குப் பின்னணியாக இருந்து ஊக்கம் கொடுப்பவர். எமது முத்தமிழ் கலசம் இதழுக்கும் கௌரவ ஆசிரியராக இருந்து, ஆக்கங்களை நெறிப்படுத்தி அழகிய முறையில் வடிவமைப்பு செய்து தருவதுடன் இதழின் முன்னேற் றத்துக்கு பக்க பலமாக இருந்தும் வருபவர்.

பல நூலாசிரியர்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்து, ஏறத்தாழ ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை வடிவமைத்து, அவை வெளியீடு காணவும் வழியமைத்துக் கொடுத்தி ருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

இவர் பெற்ற விருதுகளும் சான்றி தழ்களும் எண்ணிலடங்காதவை. அவற்றுள் கவிமுகில், கவிவாணன் கம்பன் விருது, சென்ற மாதத்தில் இலுப்பை அறக்கட்டளை சார்பில் தமிழ்அரிமா மற்றும் இன்னபிற ஏராளமான விருதுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

வயது வித்தியாசமின்றி பாரபட்சம் பாராமல், அனைவரிடமும் நட்பு பாராட்டி இனிமையாகப் பழகும் இயல்புடைய தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் எப்போதும் நேர்மறையான சிந்தனைகளுடன் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். இவரின் சேவை என்றும் தமிழுக்குத் தேவை. இவரை முத்தமிழ் கலசம் சார்பாக மனமார வாழ்த்துகிறோம்.