12/22/2024

மின்னிதழ் 12

அறிமுகம் / மின்னிதழ்

மே – ஜூன் 2022

மேலேயுள்ள மார்ச் – ஏப்ரல் 2022 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

இன்று நாம் அறிமுகப் படுத்தும் ஆளுமை…

நூல்கள், சஞ்சிகைகளின் முதற்பிரதியை வாங்கி கின்னஸ் புத்தக உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் புரவலர் ஹாஷிம் உமர் ஆவார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பாட்டலியா எனும் நகரில் உமர், ஹவ்வா உம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். சிறு குழந்தையாக இருந்த போதே குடும்பத்தினருடன் இலங்கைக்கு குடிபெயர்ந்த இவரின் தாய்மொழி மேமனாகும். இருப்பினும் தமிழ்மொழி மீது இவர் கொண்ட தீராத பற்று, இலக்கிய உலகில் இவர் பெயரை உச்சத்துக்கு கொண்டு சென்றதெனலாம். இலக்கிய ஆர்வலராக பல்லாயிரம் இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்தது மட்டு மல்லாமல், எழுத்தாளர்களின் முதற் பிரதியைப் வாங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கும் மாபெரும் பணியை 1994 ஆண்டு முதல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரின் அளப்பரிய முயற்சியும், ஆர்வமும் இலங்கையுடன் மட்டுப்படாமல் பல்வேறு நாடுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் பங்கேற்று முதற்பிரதியை பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. இவர் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான முதற் பிரதிகளை வாங்கி சாதனை படைத்துள்ளார்.

‘ஹாஷிம் உமர் அறக்கட்டளை’ மூலமாகவும், ’புத்தகப் பூங்கா’ என்ற தனது அமைப்பின் மூலமாகவும் எழுத்தாளர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி பல்வேறு உதவிகளை அவர்களுக்கு வழங்கி வரும் இவரின் சேவை பாராட்டுக்குரியது.

ஆரம்ப காலத்தில் கடின உழைப்பாளியாக இருந்த ஹாஷிம் உமர் அவர்கள் தற்போது பல நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியை பொதுப்பணிகளுக் காகச் செலவிட்டு வருவது மட்டுமல்லாமல், பல்வேறு சமூகப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஏழைக்குமர்களின் திருமணத்துக்கான நிதி, சுயதொழி லுக்கான உதவி, ஏழைப்பெண் களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்குதல், பாடசாலைகளுக்காகத் தொழுகை அறை கட்டிக் கொடுத்தல், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர் கௌரவிப்புக் கான நிதி வழங்குதல், கலை நிகழ்ச்சிகளுக்காக நிதி வழங்குதல், அனர்த்த சமயங்களில் நிவாரணப் பொருட்கள் விநியோகம் போன்ற நற்பணிகள் இவரால் மேற்கொள்ளப் படுகின்றன. இவர் செய்யும் இப்பொதுநலச் சேவை, அவசியமானவர்களை பரந்தளவில் சென்றடையவும், இவரின் சமூக நலப்பணிகள் சிறப்பாகத் தொடரவும் முத்தமிழ் கலசம் இவரை வாழ்த்துகிறது.