வாழ்தல் இனிது
பேச்சுத் திறமை என்பது, எல்லோருக்கும் இருக்கிறது.
தற்காலத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மிகத் திறமையான பேச்சாளர்களாக திகழ்கிறார்கள்.
பிறந்து, கிட்டத்தட்ட இரண்டு வருடங் களில், தெளிவாக பேசக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.
ஆனால், வளர்ந்து வாலிப மடைந்து, வயது முதிர்ந்த நிலையில் கூட..எப்படிப் பேசவேண்டும் என்று கற்றுக் கொள்வதேயில்லை.
எங்கு, யாரிடம்,, எப்படி, என்ன பேச வேண்டும் என்பதை மட்டும் கற்றுக் கொண்டால், வாழ்வில் பல சிக்கல்களை தவிர்க்கலாம்.
எதற்கெடுத்தாலும் குறை கூறித் திரியாதீர்கள்.
ஒருவர் இல்லாத இடத்தில், அவரைப்பற்றி பேசுவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
இரண்டு பேர் இருக்கும் இடத்தில் அவர்கள் சம்பந்தப்படாத விஷயங்களைப் பற்றியோ, மூன்றா வது நபரைப் பற்றியோ பேசாதீர்கள்.
ஒருவரிடம் குறையோ, தவறோ இருந்தால், அதை சம்பந்தப் பட்டவரிடமே கூறிவிடுவது சாலச் சிறந்தது.
அதை அவர்கள் திருத்திக் கொள்வதோ, அல்லது உங்கள் மீது கோபப்பட்டு விலகி விடுவதோ, அவர்களின் இஷ்டம். அந்த விவகாரம் அத்துடனே முடிந்து போகும்.
மாறாக, அதைப்பற்றி மற்றொரு வரிடம் பேசும்போது அது, இன்னும் ஒருவருக்கு பகிரப்படுகிறது. இப்படியே பலரது செவிகளையும் சென்றடைகிறது.
அதுவும் ஆளாளுக்கு, ஒவ் வொரு வடிவம் கொடுத்து, இல்லாத வற்றையும் இணைத்து, மிகைப் படுத்தி பல பேருக்கு சுவாரஸ்யமான செய்தியாகி விடுகிறது.
இதுபோன்று பலர் எத்தனை இழிவான செயலை தாம் செய்கிறோம் என்று உணராமல், விளையாட்டுத் தனமாக நடந்து கொள்கிறார்கள்.
பேசக் கற்றுக் கொடுங்கள், குழந்தைப் பருவத்தில் இருந்தே! அத் தோடு, யாரிடம், எப்படிப் பேச வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுங்கள்.
வாலிப வயதை அடையும் போது வார்த்தைகளை பக்குவமாக கையாளும் முறையைக் கற்றுக் கொள்ளுங்கள்.
பக்குவம் என்பது அந்த வயதில் ஏற்படாவிட்டால், இனி எந்த வயதிலும் ஏற்படப் போவதில்லை.
நினைவில் வைத்துக் கொள்ளுங் கள். நீங்கள் ஒரு நண்பனிடம் பேசும் தொனியில், உங்கள் ஆசான்களிடம் பேச முடியாது. ஆசான்களிடம் பேசும் தொனியில் பெற்றோர்களிடம் பேச முடியாது.
நீங்கள் யாரிடம் பேசுகின்றீர் கள் என்பதை பொறுத்து, நீங்கள் பேசும் விதம் வேறுபடுகிறது.என்ன பேசுகிறீர்கள் என்பதை பொறுத்து, பேச்சின் தொனி வேறுபடுகிறது.
ஆசான்களிடம் பேசும் போது மரியாதையுடனும், பயபக்தியுடனும் பேசுங்கள். அதிகாரிகளிடம் பேசும் போது பணிவுடன் பேசுங்கள். குழந்தை கள் மற்றும் வயதானவர்களோடு பேசும் போது கனிவுடன் பேசுங்கள்.
உங்கள் பெற்றோர்களிடம் பேசும் போது, அன்புடனும்..அடக்கத் துடனும் பேசுங்கள்.. நண்பர்களோடு பேசும் போது தோழமையுணர்வோடு பேசுங்கள்.
பேச்சில் இத்தனை விதங்களா என ஆச்சரியப்படாதீர்கள். நீங்கள் எப்படிப் பேசுகின்றீர்கள் என்பதை வைத்தே, நீங்கள் கணிக்கப் படுகிறீர்கள்.
ஒருமுறை, அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் மாணவர் ஒருவர் மிக அவசரமாக அவரிடம் ஒடி வந்தார். வந்தவர் ‘‘ஐயா.. உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்’’ என்றார்.
அவரோ.. ‘‘சரி சொல்லு பார்க்கலாம்’’ என்று கூறி விட்டு…‘‘ ஆனால், அதற்கு முன் நான் கேட்பதற்கு பதில் கூறு’’ என்றார்.
‘‘முதலில் நீ சொல்ல வந்த விஷயம் என்னைப்பற்றியதா’’ எனக் கேட்டார். ‘‘இல்லை’’ என்றான் அம் மாணவன். ‘‘அப்படி என்றால் உன்னைப் பற்றியதா’’ எனக் கேட்டார். அதற்கும் இல்லை என்றே பதில் வந்நது.
‘‘அப்படியானால் இதற்காவது பதில் சொல்… உனக்கோ ,எனக்கோ பயனுள்ள ஏதாவது விஷயமா’’ என்றார். மாணவன் தலை குனிந்தவாறு இல்லை என்றான்.
‘‘இதோ பார்.. உன்னைப் பற்றியும் அல்லாத, என்னைப் பற்றியும் அல்லாத, எனக்கும். உனக்கும் சம்பந்தமில்லாத எனக்கோ, உனக்கோ பயனளிக்காத ஒன்றைக் குறித்து, நாம் எதற்காக பேச வேண்டும்? அதற்காக நேரத்தை நாம் ஏன் வீணடிக்க வேண்டும்? போ.. போய் விடு.. இனிமேல் இப்படியான விஷயங்களை சுமந்து என்னிடம் வராதே’’ என்று கடிந்து கொண்டார் .
இதுவே ஒரு மூன்றாம் தர மனிதராக இருந்தால், பொழுது போக்க சுவாரஸ்யமான கதை கிடைத்திருக்கிறது என அலசி ஆராய்ந்திருப்பார்.
அறிஞர்களும், புத்தி ஜீவி களும், இப்படியான பேச்சுக்களால் நேர காலத்தைப் வீணடித்தவர்கள் அல்ல.
எல்லோரிடமும், எல்லா வற்றை யும் பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங் களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ, எல்லாவற்றையும்..எல்லோரிடமும் பேசாதீர்கள்.
கேட்டுக் கொண்டிருப்பவர் சில வேளை எரிச்சல் அடைவார்கள்.. சில வேளை சங்கடப்படுவார்கள்,.
அடுத்தவர் விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர் மட்டும்,. கண் களையும், காதுகளையும், அகலத் திறந்து கொண்டு தலையாட்டவும்,, கருத்து சொல்லவும் தயாராக இருப் பார்கள்.
நீங்கள் யாருடன் பேசினாலும், அவர்களது கண்களைப் பார்த்து பேசுங்கள். மனிதர்களின் மன உணர்வு களை துல்லியமாகக் காட்டும் கண்ணாடி தான் கண்கள்.
ஆக, கண்களைப் பார்த்து பேசும் போது.. அவர்கள் உங்கள் பேச்சில் எந்தளவு அக்கறை காட்டுகிறார் கள்; எந்தளவு உங்கள் பேச்சை நம்புகிறார்கள்; பேச்சில் வெறுப்படைகிறார்கள்,கோபப் படுகிறார்களா என்பதையெல்லாம் உங் களால் உணர்ந்து கொள்ள முடியும்.
மற்றவர்களையும் பேச விடுங்கள்.
நீங்கள் பேசும் போது கருத்தில் கொள்ள வேண்டிய மற்று மொரு முக்கிய விடயம் நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல்..
மற்றவர்களையும் பேச விடுங்கள்.
உங்கள் கருத்துக்களை அவர் கள் ஆதரிக்கிறார்களா அல்லது மாற்றுக் கருத்துகள் ஏதேனும் உண்டா என்பதை அறியக் கூடிய வழிமுறை அது.
ஒருசிலர் பேசும்போது, அவர்கள் மட்டும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
கடுகதி ரயில் போலவே அவர் கள் பேச்சும் இடைவிடாது தொடரும்.
எதிரே இருப்பவர், ஏதாவது சொல்ல விரும்புகிறாரா, குறைந்த பட்சம், தான் பேசுவதை சரிவர புரிந்து கொள்கின்றாரா என்ற உணர்வு கூட அவருக்கு இருக்காது.
அடுத்தவரை பேசவிடாமல் நீங்கள் மட்டுமே பேசுவதானால், கண்ணாடிக்கு முன் நின்று பேசுங்கள்.
எதிரே ஒருவர் தேவையே இல்லை.
பேச்சில் தெளிவு, நிதானம் இரண்டுமே இல்லை எனில், நீங்கள் எவ்வளவு தேர்ந்த பேச்சாளராக இருந்தாலும் பயனில்லை.
உங்கள் பேச்சு ,மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமை யாகவும், தெளிவாகவும் இருப்பது அவசியம்.
அப்போது தான் உரையாடல் களில் அர்த்தம் இருக்கும். கோபமாக இருக்கும் போது, நீங்கள் பேசுவதை விட, மெளனமாக இருப்பதே சிறந்தது.
ஏனென்றால் கோபத்தில் கொட்டப் படும் வார்த்தைகள் மிகக் கடுமை யாகவே இருக்கக் கூடும். அதை மீண்டும் அள்ளி எடுக்கவும் முடியாது.
கோபத்தில் நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் எதிரே இருப்ப வரை உடைந்து போகச் செய்யும்.
அவரது உணர்வுகள் சிதைந்து போகக் கூடும். தன்மானம் தகர்க்கப்படக் கூடும்..
கோபத்தில் கொட்டப்படும் வார்த்தைகள் ,அனேகமாக முத்துக் களாக இருப்பதில்லை. அவை அமில மாகவே இருக்கும். அமிலம், யாரிடமும் அனுதாபம் காட்டாது.
அவசரத்தில் வார்த்தைகளை கொட்டி விட்டு, நிதானமாக நீங்கள் வருந்து வதால் பயனில்லை.
கோபம் என்பதும், மனித உணர்வுகளில் ஒன்று. கோபத்தில் மெளனமாக இருப்பதால், அதை பலப் படுத்த முடியும். மாறாக வார்த்தை களை வீசுவதால், அது உங்களையே பலவீனமாக்கி விடும்.
‘‘நன்றாக சிந்தித்த பின்னரே உங்கள் நாவை அசையுங்கள்.’’ நீங்கள் அவமானப் பட மாட்டீர்கள்» என்பது கிரேக்க பழமொழி.
யோசித்துப் பேசினால், நீங்கள் சரியானதை மட்டுமே பேசுவீர்கள்.
பேச்சில், மிகத் தாழ்வான பேச்சு மற்றவர் மனம் நோகப் பேசுவதே.
எப்போதும் பேச்சில் நிதானத்தையும், கனிவையும் கையாளுங்கள். தப்பித் தவறி வார்த்தைகளால் எவரையும் காயப்படுத்தி விட்டால் ,உடனடியாக சம்பந்தப்பட்ட நபரிடம் மன்னிப்பு கோரி விடுங்கள். மன்னிப்புக் கோருதல், உங்களை ஒரு போதும் தாழ்த்தி விடாது.
மாறாக மற்றவர் உள்ளத்தில் உங்களை, உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும்.
சிலர் விஷம் தோய்ந்த கூரிய வார்த்தைகளை தேனொழுக பேசுவதில் வல்லுநர்கள். அப்படியான பேச்சு மற்றவர் மனதில் ஆறாத ரணமாக பதிந்து விடும். அந்தக் காயங்களுக்கு மருந்து கிடையாது. .ஆதலால், ஒவ்வொரு வார்த்தையும் யோசித்து பேசப்படவேண்டும்.
பேச்சில் நளினம் இல்லை என்றாலும், நாகரீகம் இருக்க வேண்டும். அன்பு இல்லை என்றாலும் அடக்கம் இருக்க வேண்டும். பணிவு இல்லாவிட்டாலும், பண்பு இருக்க வேண்டும்.
உங்களை யாராவது வார்த்தை களால், காயப்படுத்துவதை நீங்கள் விரும்புவீர்களா?
இதமான, இனிய பேச்சுக் களை விரும்பும், நீங்கள் இன்னொரு வருக்கும் அதைத் தானே தர வேண்டும்?
இறுதியாக, வார்த்தைகளில் மட்டும் அல்ல பேசும் தொனியில் கூட கவனமாகக் இருக்க வேண்டும்.
வார்த்தைகள் ,நல்லதாகவே இருந்தாலும், பேசும் தொனியில் நையாண்டித் தனம் இருந்தால். அது அழகான வார்த்தைகளையும் அசிங்கப் படுத்தி விடும்.
ஆகவே, பேசப்படும் வார்த்தை கள் எவ்வளவு முக்கியமோ, அதை விட பேசும் தொனியும் முக்கியம் தான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
‘‘ஒரு சொல் கொல்லும்’’
‘‘ஒரு சொல் வெல்லும்’’
இனிது! இனிது !
வாழ்தல் இனிது!
- நிஷா ரஹ்மான்